தந்தை செல்போன் வாங்கித்தராததால் வேதனையில் கல்லூரி மாணவி தற்கொலை


தந்தை செல்போன் வாங்கித்தராததால் வேதனையில் கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 4 Jan 2019 4:00 AM IST (Updated: 4 Jan 2019 4:27 AM IST)
t-max-icont-min-icon

தந்தை செல்போன் வாங்கித்தராததால் வேதனையில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

டி.என்.பாளையம், 

கோபி கள்ளிப்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). பெயிண்டர். இவருடைய மனைவி திருமதி. இவர்களுக்கு மகள் அபிராமி (21) என்ற மகளும், சிலம்பரசன் (19) என்ற மகனும் உள்ளனர். இதில் அபிராமி கோபி கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று அபிராமி தனது தந்தையிடம் செல்போன் வாங்கித்தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு சரவணன் தற்போது பணம் இல்லை. பிறகு வாங்கித்தருகிறேன் என்று அபிராமியிடம் கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து சரவணன் அங்கிருந்து வேலைக்கு சென்றுவிட்டார்.

வீட்டில் தனியாக இருந்த அபிராமி மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். பின்னர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்துவிட்டார். இதனால் வாயில் நுரைதள்ளியபடி மயங்கி கிடந்தார். இதுபற்றி தெரிய வந்ததும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அபிராமி இறந்தார்.

இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story