பாம்பன் தூக்குப்பாலத்தை சிரமப்பட்டு திறந்த தொழிலாளர்கள்
எடை மேலும் அதிகரிக்கப்பட்டதால் பாம்பன் ரெயில் தூக்குப் பாலத்தை சிரமப்பட்டு தொழிலாளர்கள் நேற்று திறந்தனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தின் உறுதித்தன்மையை அதிகரிக்கும் வகையில் அதன் எடையை அதிகரிக்கும் பணி கடந்த 2 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாம்பன் ரெயில் தூக்குப் பாலத்தை திறந்து வைத்து பராமரிப்பு பணிகள் மேற் கொள்ள ரெயில்வே அதிகாரிகள் திட்டமிட்டனர்.அதை தொடர்ந்து நேற்று பகல் 1 மணிஅளவில் ரெயில் தூக்குப் பாலம் திறக்கும் பணி தொடங்கியது.
ஆனால் தூக்குப் பாலத்தில் ஏற்கனவே இருந்த எடையை விட மேலும் எடை அதிகரிக்கப்பட்டுள்ளதால் தூக்குப் பாலத்தை திறக்க முடியாமல் ரெயில்வே தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்ததுடன் 1 மணி நேரத்திற்கு மேலாக சிரமப்பட்டு ஒரு பகுதியை மட்டும் திறந்தனர்.
திறக்கப்பட்ட பகுதியில் கூடுதலாக இரும்பு பிளேட்கள் வைத்து வெல்டிங் செய்து பராமரிப்பு பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. பாம்பன் பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்று வீசி வரும் நிலையிலும் காற்றின் வேகத்தையும் பொருட்படுத்தாமல் தூக்குப் பாலத்தில் பராமரிப்பு பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
மேலும் பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யும் பணியில் மத்தியஅரசின் கட்டமைப்பு ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த 15 பேர் கொண்ட வல்லுனர்கள் குழுவினர், தூக்குப் பாலத்தில் அதி நவீன கருவிகளை பொருத்தி ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த ஆய்வு அறிக்கையை வைத்தே மீண்டும் பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்து இயக்குவது குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Related Tags :
Next Story