பள்ளி மாணவர்களுக்கு துணிப்பை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்


பள்ளி மாணவர்களுக்கு துணிப்பை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
x
தினத்தந்தி 5 Jan 2019 3:45 AM IST (Updated: 4 Jan 2019 11:46 PM IST)
t-max-icont-min-icon

புதூர் அருகே உள்ள மெட்டில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி துணிப்பைகள் வழங்கினார்.

தூத்துக்குடி, 

புதூர் அருகே உள்ள மெட்டில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி துணிப்பைகள் வழங்கினார்.

துணிப்பைகள்

தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே உள்ள மெட்டில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணிப்பைகளையும், உலோகத்தால் ஆன குடிநீர் பாட்டில்களையும் வழங்கினார். மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-

விழிப்புணர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 6 மாதமாக பல்வேறு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது தடை செய்யப்பட்டுள்ள 14 வகையிலான பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்தும், கடைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

எந்தவொரு திட்டம் என்றாலும், விழிப்புணர்வு மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் சிறப்பாக செயல்படுத்த முடியும். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு துணிப்பைகள் மற்றும் உலோக பாட்டில்கள் வழங்கி உள்ளனர். பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

காய்கறி தோட்டம்

முன்னதாக, அவர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் கல்வி புரவலர்களின் கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, முதன்மை கல்வி அலுவலர் முருகேசன், தாசில்தார் ராஜ்குமார், புதூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், வசந்தா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story