திருவாரூர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் இன்றி செயல்பட வேண்டும் முத்தரசன் வலியுறுத்தல்


திருவாரூர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் இன்றி செயல்பட வேண்டும் முத்தரசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Jan 2019 3:00 AM IST (Updated: 5 Jan 2019 12:03 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் இன்றி செயல்பட வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தினார்.

நெல்லை, 

திருவாரூர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் இன்றி செயல்பட வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தினார்.

தேர்தல் வாக்குறுதி

நெல்லையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாரதீய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த அரசால் மக்களுக்கு துன்பமும், துயரமும் தான் ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் 20 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு மட்டும் அவசர, அவசரமாக இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை.

திருவாரூர் இடைத்தேர்தல்

இந்த தொகுதியில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனால் இந்த தொகுதியில் தி.மு.க. போட்டியிடுகிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். விரைவில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதை தொடர்ந்து தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். தேர்தல் ஆணையம் சுதந்திரமான செயல்படும் ஒரு அமைப்பு. ஆனால் தற்போது தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. நம்பகத்தன்மையை இழந்து வருகிறது. திருவாரூர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் இன்றி செயல்பட வேண்டும்.

வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு

வருகிற 8,9 ஆகிய தேதிகளில் மத்திய அரசின் தவறான போக்கை கண்டித்து அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்தத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story