திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும் காதர் முகைதீன் பேட்டி


திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும் காதர் முகைதீன் பேட்டி
x
தினத்தந்தி 5 Jan 2019 3:00 AM IST (Updated: 5 Jan 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் கூறினார்.

புளியங்குடி, 

திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் கூறினார்.

பள்ளிவாசல் திறப்பு

நெல்லை மாவட்டம் புளியங்குடி மீராசா அஹ்லுஸ் சுன்னத்வல் ஜமாத் ஹனபி மேலப்பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி நிர்வாகத்திற்கு உட்பட்ட 4-வது மஸ்ஜிதுல் குபா புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.மேலப்பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி தலைவர் முகம்மது இஸ்மாயில் தலைமை தாங்கினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கு மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், நகர தலைவர் அப்துல்வகாப் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

ஜமாத் கமிட்டி துணை தலைவர் முகம்மது பாவா, மீராசா பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி செயலாளர் முகம்மது இப்ராகிம் ஆகியோர் வாவேற்றனர். இமாம் கலீல் ரகுமான் விழாவை தொடங்கி வைத்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் முகைதீன், வீரசோழன் கைரத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி முதல்வர் அப்துல்காதர் ஆகியோர் புதிய பள்ளிவாசலை திறந்து வைத்தனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணை தலைவர் அப்துல் ரகுமான், மாநில செயலாளர் நெல்லை மஜீத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. அமோக வெற்றிபெறும்

பின்னர் காதர் முகைதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முத்தலாக் பிரச்சினையை காரணமாக வைத்து முஸ்லிம் ஆண்களை பாரதீய ஜனதா அரசு சிறையில் அடைக்க முயற்சி செய்கிறது. பா.ஜனதா கட்சி இன்னும் சில மாதங்களில் இந்திய வரலாற்றில் இருந்து காணாமல் போய்விடும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முயல வேண்டும். தற்போது நடைபெற உள்ள திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும். அதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பாடுபடும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story