வறுமையை ஒழிப்பதுதான் சமுதாய வளர்ச்சியை ஏற்படுத்தும் ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரி வெள்ளி விழாவில் ப.சிதம்பரம் பேச்சு
வறுமையை ஒழிப்பதுதான் சமுதாய வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் வெள்ளி விழாவில் ப.சிதம்பரம் பேசினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் வெள்ளி விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் நிறுவனரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ரகுபதி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கல்லூரியின் அறங்காவலர் குழு தலைவர் கவிதா சுப்பிரமணியன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பரசுராமன் அறிக்கை வாசித்தார்.
விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-
இந்தியாவில் உள்ள ஏற்றத்தாழ்வு என்பது பொருளாதார ரீதியிலும், மதத்தின் அடிப்படையிலும் மட்டுமல்லாமல் சாதி அடிப்படையிலும் உள்ளது. ஒரு கோவிலுக்குள் ஆண் போகலாம், பெண் போகக் கூடாது என்பது சரியா, தவறா என்று நீங்கள் முடிவுக்கு வரவேண்டும் என்றால் அதற்கு கலை அறிவியல் தேவை. வெளிநாடுகளில் உள்ள ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்கள் கலை அறிவியல் கற்று கொடுக்கிறது. அந்த வகையில் ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரி வளர்ச்சி அடைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
கலை அறிவியல் துறை பொருளாதாரத்தை சார்ந்தது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு வித்தியாசம் மிக அதிகமாக உள்ளது. ஒரு சமுதாயம் வளமான வலிமையான சமுதாயமாக வளர வேண்டும் என்றால் வறுமையை ஒழிப்பதுதான் சமுதாய வளர்ச்சியை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அவர் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து, ஆசிரியர்கள், அலுவலர்களுக்கான குடியிருப்பு வளாகத்திற்கான அடிக்கல் நாட்டினார். மேலும் வெள்ளிவிழாவை நினைவு கூறும் வகையில் திருச்சி மத்திய மண்டல அஞ்சலகத் துறை தலைவர் அம்பேஷ் உப்மன்யு சிறப்பு தபால் உறையை வெளியிட ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார். வெள்ளி விழா சிறப்பு மலரையும் ப.சிதம்பரம் வெளியிட கற்பக விநாயகா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பொது மேலாளர் அண்ணாமலை பெற்றுக்கொண்டார். விழாவில் ஜெ.ஜெ. கல்விக் குழுமத்தின் செயலாளர் சுப்ரமணியன், ஜெ.ஜெ. கல்வி நிறுவனத்தின் தலைவர் வள்ளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்த்துறை தலைவர் தயாநிதி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story