கடந்த ஆண்டு 242 விபத்து வழக்குகளில் ரூ.22 கோடி இழப்பீடு தஞ்சை கோர்ட்டு உத்தரவு


கடந்த ஆண்டு 242 விபத்து வழக்குகளில் ரூ.22 கோடி இழப்பீடு தஞ்சை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Jan 2019 3:00 AM IST (Updated: 5 Jan 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

கடந்த ஆண்டு 242 விபத்து வழக்குகளில் ரூ.22 கோடி இழப்பீடு வழங்க தஞ்சை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர்,

விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்கும் மாவட்ட நீதிமன்றங்களுள் ஒன்றாக தஞ்சை மாவட்ட மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் மற்றும் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் உள்ளது. இந்த கோர்ட்டில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டு உயிர் இழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்படுகிறது.

கோர்ட்டு உத்தரவின்படி இந்த இழப்பீடு தொகைகளை சம்பந்தப்பட்ட அரசு, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகின்றன. அதேபோல விபத்து வழக்குகளில் உரிய ஆவணங்கள் இல்லாத மோட்டார் வாகனங்களுக்கு அதன் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகையை வழங்குகிறார்கள்.

இதில் சில வழக்குகள் மேல்முறையீடு செய்யப்படுகின்றன. அந்தவகையில் கடந்த 2018-ம் ஆண்டில் 242 விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டில் உயிர் இழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு மொத்தம் ரூ.22 கோடியே 8 லட்சத்து 36 ஆயிரத்து 636 இழப்பீடு தொகையாக வழங்க நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

Next Story