புத்தூரில் மைனர் பெண் பாலியல் பலாத்காரம் தொழிலாளியை போலீஸ் தேடுகிறது
புத்தூரில் மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மங்களூரு,
புத்தூரில் மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பாலியல் பலாத்காரம்
தட்சிண கன்னடா மாவட்டம் கடபா போலீஸ் எல்லைக்குட்பட்ட நெல்லியாடி கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்திரா ஆச்சார்யா (வயது 30). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில தினங் களுக்கு முன்பு அந்தப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அந்த வழியாக வந்த 16 வயது மைனர் பெண் ஒருவரை வாயை பொத்தி மறைவான பகுதிக்கு தூக்கி சென்றார்.
அங்கு வைத்து அவர் மைனர் பெண்ணை வலுகட்டாயமாக பாலியல் பலாத் காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் ரவீந்திரா ஆச்சார்யா அந்த மைனர் பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் பயந்த அவர், இதுபற்றி வெளியே யாரிடமும் கூறவில்லை.
போலீசில் புகார்
இந்த நிலையில் நேற்று முன்தினம் மைனர் பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரை, மைனர் பெண்ணின் பெற்றோர் தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மைனர் பெண் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மைனர் பெண்ணிடம் அவர்கள் விசாரித்தனர். அப்போது அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதுகுறித்து மைனர் பெண்ணின் பெற்றோர் கடபா போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் கடபா போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரவீந்திரா ஆச்சார்யாவை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story