வேப்பூர் அருகே, காதலியிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது


வேப்பூர் அருகே, காதலியிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 Jan 2019 3:45 AM IST (Updated: 5 Jan 2019 3:50 AM IST)
t-max-icont-min-icon

வேப்பூர் அருகே காதலியிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டில் இருந்து திரும்பிய அவரை விமான நிலையத்தில் போலீசார் மடக்கினர்.

விருத்தாசலம், 

வேப்பூர் அருகே உள்ள ம.புடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் கதிரவன்(வயது 24). இவரும், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்த 16 வயதுடைய மாணவியும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து வந்த னர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அந்த சமயத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கதிரவன், அந்த மாணவியிடம் உல்லாசம் அனுபவித்து வந்தார்.

இதுபற்றி அறிந்ததும் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மாணவியின் குடும்பத்தினரும், கதிரவனின் குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கதிரவனின் உறவினர்கள், மாணவிக்கு 18 வயது பூர்த்தி அடைந்ததும் கதிரவனுடன் திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளித்தனர். அதற்கு மாணவியின் பெற்றோரும் சம்மதித்தனர்.

இதனிடையே கதிரவனுக்கு அந்த மாணவியை திருமணம் செய்ய விருப்பமில்லை. அவரது பெற்றோருக்கும் விருப்பமில்லை. எனவே கதிரவனை அபுதாபிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி அறிந்ததும் மாணவியின் பெற்றோர், கதிரவனின் பெற்றோரிடம் கேட்டதற்கு அவர்களை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் விருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரவனின் தந்தை, தாய் உள்பட 3 பேரை கைது செய்தனர். கதிரவன் அபுதாபியில் இருந்ததால் அவரை கைது செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் கதிரவன், அபுதாபியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகா தலைமையில் தலைமை காவலர் லதா, காவலர் வேலுமணி ஆகியோர் நேற்று அதிகாலையில் சென்னை விமான நிலையத்திற்கு சென்றனர். அதிகாலை 3 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த கதிரவனை கைது செய்தனர். பின்னர் அவரை, கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன் கதிரவனை 15 நாட்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். 

Next Story