பள்ளி செல்ல தாயார் திட்டியதால் மாணவன் தீக்குளித்து இறந்த பரிதாபம்


பள்ளி செல்ல தாயார் திட்டியதால் மாணவன் தீக்குளித்து இறந்த பரிதாபம்
x
தினத்தந்தி 5 Jan 2019 4:32 AM IST (Updated: 5 Jan 2019 4:32 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கு செல்ல தாயார் திட்டியதால் மாணவன் தீக்குளித்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த பாப்பாகுடியை சேர்ந்தவர் பூவேந்திரன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் லிவியரசன் (வயது 9). இவன் பாப்பாகுடியில் உள்ள பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று காலையில் பள்ளிக்கு செல்ல தாமதமானதால், மாணவனை தாயார் திட்டினாராம்.

தொடர்ந்து பள்ளிக்கு செல்லாமல் தாமதப்படுத்தியதை அடுத்து தாயார் லிவியரசனை மேலும் கண்டித்தாராம். இதனால் மாணவன் சோகமாக காணப்பட்டு வந்தானாம். பின்பு பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளான். அப்போது தாயார் வெளியில் சென்று விட்டாராம்.

அந்த நேரம் பார்த்து மாணவன் லிவியரசன் வீட்டில் இருந்த மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டான். உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவன் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் இறந்தான். இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சீராளன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story