அரியலூர், கோவில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு
அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் உண்டியல்களை உடைத்து பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர்,
அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டு இருந்த 2 உண்டியல்கள் நேற்று உடைக்கப்பட்டு பணம் திருடுபோன நிலையில் கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து அரியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story