சாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணிடம் 4½ பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு மர்ம ஆசாமிக்கு போலீசார் வலைவீச்சு
நாமக்கல்லில் சாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணிடம் 4½ பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாமக்கல்,
அனுமன் ஜெயந்தியை யொட்டி நாமக்கல் ஆஞ்சநேயரை நேற்று திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் மாசிகன். இவரது மனைவி ரேவதி (வயது 40). இவரும் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்களுடன் ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய வந்து இருந்தார்.
இதற்காக நாமக்கல் வந்த ரேவதி முதலில் நரசிம்ம சாமியை தரிசனம் செய்ய சென்றார். அங்கு தாலிக்கு பொட்டு வைக்க கழுத்தை பார்த்தபோது கழுத்தில் அணிந்து இருந்த 4½ பவுன் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரேவதி கதறி அழுதார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் கோவில் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். இருப்பினும் தாலிச்சங்கிலி கிடைக்கவில்லை. இந்த நிலையில் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணிடம் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story