ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட என்ஜினீயரிங் மாணவர் கழுத்தை அறுத்து படுகொலை

கும்பகோணம் அருகே நேற்று முன்தினம் இரவு ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டது.
திருவிடைமருதூர்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆவணியாபுரத்தை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவர் துபாயில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் முன்தசர்(வயது 20). இவர், மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவில் படித்து வந்தார்.
முன்தசர் நேற்று முன்தினம் மாலை 6.30 மணி அளவில் தனது தாயார் மும்தாஜ் பேகத்துடன் திருமங்கலக்குடியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்றார். பின்னர் அங்கிருந்து தனது நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு செல்வதாக போன் மூலம் தனது தாயாருக்கு தகவல் தெரிவித்து விட்டு வெளியில் சென்றார்.
இந்த நிலையில் இரவு 8.15 மணி அளவில் முன்தசர் செல்போனில் இருந்து மும்தாஜ் பேகத்தின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. உடனே மும்தாஜ் பேகம் தனது செல்போனை எடுத்து பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர், முன்தசரை நாங்கள் கடத்தியுள்ளோம். கோவைக்கு அழைத்துச் செல்கிறோம். ரூ.5 லட்சம் கொடுத்தால் தான் உங்கள் மகனை விடுவிப்போம் என மிரட்டியுள்ளான்.
இதனால் பதற்றம் அடைந்த மும்தாஜ் பேகம் மற்றும் அவரது உறவினர்கள் உடனடியாக திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்துக்கு
விரைந்து சென்றனர். இதுகுறித்து முன்தசரின் தாய் மாமா நசீர் முகம்மது புகார் கொடுத்தார்.
இதன் புகாரின் பேரில் திருவிடைமருதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் விசாரணை மேற்கொண்டார். முதல் கட்ட விசாரணையில் இரவு 8.15 மணி அளவில் முன்தசர் போனில் இருந்து வந்த அழைப்பு திருபுவனம் பகுதியில் இருந்து வந்துள்ளது என்பதை செல்போன் சிக்னல் மூலம் கண்டறிந்தனர்.
இதனைத்தொடர்ந்து அந்த செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளதாக பதில் வந்தது . இதனால் உறவினர்களிடையே மேலும் பதற்றம் ஏற்பட்டது. போலீசாரும், உறவினர்களும் இரவு முழுவதும் தீவிரமாக தேடினர்.
இந்த நிலையில் நேற்று காலை திருபுவனம் வீரசோழன் ஆற்றங்கரையில் மாணவர் முன்தசர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. இதை அறிந்த உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முன்தசர் உடலை பார்த்து கதறி அழுதனர்.
பின்னர் போலீசார், முன்தசர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்தசர் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் எங்கு உள்ளது என்று தெரியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கும்பகோணம் வந்து பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினார். இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தவும், கொலையாளிகளை கண்டுபிடிக்கவும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
பணத்திற்காக கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது இந்த கொலைக்கு வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்த கொலை தொடர்பாக 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் விசாரணைக்கு அழைத்து வந்தவர்களை விடக்கோரி பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த சிலர் திருவிடைமருதூர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு கூடி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட என்ஜினீயரிங் மாணவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story