தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, அடுப்பு விற்பனை மும்முரம்


தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, அடுப்பு விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 6 Jan 2019 3:30 AM IST (Updated: 6 Jan 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டியில் பொங்கல் பானை, அடுப்பு, கோலப்பொடி விற்பனை மும்முரமாக நடக்கிறது.

கோவில்பட்டி, 

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டியில் பொங்கல் பானை, அடுப்பு, கோலப்பொடி விற்பனை மும்முரமாக நடக்கிறது.

தைப்பொங்கல்

தைப்பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, கோவில்பட்டி கடலைக்கார தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பானை, விறகு அடுப்பு போன்றவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மானாமதுரை, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொங்கல் பானை, விறகு அடுப்பு, அடுப்புகட்டி போன்றவற்றை விற்பனைக்காக கோவில்பட்டிக்கு கொண்டு வந்துள்ளனர்.

பொங்கல் பானையின் அளவுக்கு ஏற்ப ரூ.40 முதல் ரூ.150 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று விறகு அடுப்பு ரூ.80 முதல் ரூ.120 வரையிலும், 3 அடுப்புகட்டி ரூ.120-க்கும் விற்கப்படுகிறது. அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

கோலப்பொடி

மதுரை, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் இருந்து 24 வகையான ரேடியம் வண்ண கோலப்பொடிகளும், அருப்புக்கோட்டை, தாழையூத்து, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து சாதாரண வண்ண கோலப்பொடிகளும் விற்பனைக்காக கோவில்பட்டிக்கு கொண்டு வந்துள்ளனர். கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகில், தெற்கு பஜார், மார்க்கெட் ரோடு உள்ளிட்ட இடங்களில் கோலப்பொடிகள் விற்பனை மும்முரமாக நடக்கிறது.

கோலப்பொடிகள் 100 கிராம் ரூ.5-க்கும், ஒரு கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

Next Story