வெற்றிகள் நமக்கு வந்து சேர அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்க வேண்டும்; சிவல்புரி சிங்காரம் பேச்சு
நமக்கு வெற்றிகள் வந்து சேர வேண்டும் என்றால், அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்க வேண்டும் என்று சிவல்புரி சிங்காரம் பேசினார்.
சிவகங்கை,
காரைக்குடி அருகில் உள்ள வ.சூரக்குடியில் அமைந்துள்ள சிவஆஞ்சநேயர் திருக்கோவிலில் 13-ம் ஆண்டு அனுமன் ஜெயந்திவிழா செட்டிநாடு கிரிவலக்குழுத் தலைவர் சிவல்புரிசிங்காரம் தலைமையில் நடைபெற்றது. வடை மாலை அலங்காரமும், வெற்றிலை மாலை அலங்காரமும் செய்து சிவஆஞ்சநேயர் அருள்பாலித்தார். இதில் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் மணிமேகலை, புவனேஸ்வரி, என்ஜினீயர் ஏகப்பன், அண்ணாமலை ஆகியோர் பக்திப்பாடல்களைப் பாடினார். உதயகுமார், அப்புராஜ், துரைராஜ் குழுவினரின் பஜனைப் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு நடைபெற்ற ஆன்மிக விழாவிற்கு செட்டிநாடு கிரிவலக் குழுத் தலைவர் சிவல்புரிசிங்காரம் தலைமை தாங்கினார். அவரின் ஆன்மிக சேவையைப் பாராட்டி கோவில் நிர்வாகி முத்துராமன் பொன்னாடை, சந்தனமாலை அணிவித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.கே. உமாதேவன், வேந்தன்பட்டி ஸ்ரீனிவாசன், மின்சாரவாரிய முன்னாள் இயக்குனர் அழகப்பன்கோதை, சென்னை ஐகோர்ட்டு வக்கீல் எஸ்.ஆர்.எம். ராமசாமி, லதா மீனாட்சி, புதுகை தியாகராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்பு சிவல்புரிசிங்காரம் பேசும் போது கூறியதாவது:-
பூக்களைக் கொண்டு செய்வதற்கு பெயர் பூஜை என்று பெயர். ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உகந்த பூ என்று சில பூக்கள் இருக்கின்றன. அவற்றைத் தேர்ந்தெடுத்து மாலையாக்கி அணிவித்தால் வரமும் கிடைக்கும். வளமான வாழ்க்கையும் அமையும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் அனுமனைப் பொறுத்தவரை பூமாலை சூட்டுவதைவிட வெற்றிலை மாலை, வடைமாலை, துளசி மாலையைச் சூட்டினால் வெற்றிகள் நமக்கு வந்து சேரவழிவகுத்துக் கொடுப்பார். அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும், தடைகள் அகல வேண்டுமென்றால் வடை மாலை அணிவிக்க வேண்டும், துயரங்கள் தீரவேண்டுமானால் துளசிமாலை அணிவிக்க வேண்டும்.
வெற்றிலையில் பாக்குவைத்துக் கட்டித் தான் அணிவிக்கவேண்டும். சொல்லின் செல்வர் என்ற பட்டம் பெற்றவர் அனுமன். எனவே வாக்கு வளம் பெருகவும், திக்கிப் பேசும் குழந்தைகள் திணறாமல் பேச சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபடுவது நல்லது. அனுமனுக்குவாலில் பலம். எனவே நாம் இல்லத்தில் அனுமன் படத்தில் வாலில் பொட்டு வைத்து வழிபட்டால் உடல்நலம் சீராகும். வாழ்விலும் வளம் கிடைக்கும். அனுமன் பிறந்த மூல நட்சத்திரத்தில் சிறப்பு வழிபாடுகளைவைத்துக் கொண்டாலும், மூல நட்சத்திரதோஷம் அகன்று முன்னேற்றம் நமக்குக் கிடைக்கும். பிரிந்த உறவினர்கள் மீண்டும் வந்திணையும் வாய்ப்பு உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.
காரைக்குடி, நேமம், சொக்கலிங்கம் புதூர், சூரக்குடி, கீழச்சிவல்பட்டி, தேவகோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமமக்கள் மற்றும் செட்டிநாடு கிரிவலக்குழு பக்தர்கள் ஏராளமாக வந்து கலந்துகொண்டனர். கோவில் நிர்வாகி முத்துராமன், செல்விமுத்துராமன் ஆகியோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். செட்டிநாடு ரமேஷ் குருக்கள் ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, வடை மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்திருந்தார்.

Related Tags :
Next Story