நெல்லையில் அரசு உதவி வக்கீல் பணிக்கான தேர்வு 682 பேர் எழுதினர்


நெல்லையில் அரசு உதவி வக்கீல் பணிக்கான தேர்வு 682 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 6 Jan 2019 3:30 AM IST (Updated: 6 Jan 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் நடந்த அரசு உதவி வக்கீல் பணிக்கான எழுத்து தேர்வை 682 பேர் எழுதினர்.

நெல்லை, 

நெல்லையில் நடந்த அரசு உதவி வக்கீல் பணிக்கான எழுத்து தேர்வை 682 பேர் எழுதினர்.

எழுத்து தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அரசு உதவி வக்கீல் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. நெல்லையில் மேக்தலின் மேல்நிலைப்பள்ளி, ஜோஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, ரோஸ்மேரி மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 மையங்களில் தேர்வு நடந்தது. இந்த மையங்களில் தேர்வு எழுத 836 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 682 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 154 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இந்த தேர்வை தாசில்தார் தலைமையில் அமைக்கப்பட்டு இருந்த சுற்றுக்குழுவினர் கண்காணித்தனர். தேர்வு வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. தேர்வு மையத்திற்கு தேவையான குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தன. தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

செல்போனுக்கு தடை

தேர்வு மையத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் தேர்வு எழுத சென்றவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள் பெட்டியில் செல்போன்களை வைத்து பூட்டி சென்றனர். சிலர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்களிடம் செல்போனை கொடுத்து சென்றனர். நெல்லை புதிய பஸ்நிலையம், சந்திப்பு பஸ்நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Next Story