23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jan 2019 3:15 AM IST (Updated: 6 Jan 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி, 

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், பொது வினியோக முறையை பலப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்கவும், அனைத்து தொழிலாளர்களுக்கும் நலத்திட்டங்களை அமல்படுத்தவும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.

பொதுத்துறைகளின் பங்கு விற்பனையை நிறுத்தவும், ஒப்பந்த ஊழியர் முறையினை ரத்து செய்யவும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்கவும் வேண்டும். ரெயில்வே காப்பீடு, பாதுகாப்பு துறைகளில் பன்னாட்டு மூலதனத்தை அனுமதிக்கக்கூடாது என்பன உள்பட 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து சங்கங்கள் சார்பில் 8 மற்றும் 9-ந்தேதிகளில் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

இதையொட்டி பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் சசிதரன் தலைமை தாங்கினார். முன்னதாக செயலாளர் பிரபாகரன் வரவேற்று பேசினார். மாநில செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன் வேலை நிறுத்த போராட்டம் குறித்து விளக்கி பேசினார்.

இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பு செயலாளர் தங்கமணி மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story