கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா: கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை சாற்றப்பட்டது
கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை சாற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி,
ஆஞ்சநேயர் பிறந்த மார்கழி மாதம் மூலம் நட்சத்திர தினத்தன்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, திருச்சியில் பிரசித்தி பெற்ற கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.
தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை சாற்றப்பட்டது. மேலும் 10 ஆயிரத்து 8 ஜாங்கிரி மாலையும் சாற்றப்பட்டது. 2 மாலைகளுடன் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் அதிகாலை முதல் வரத்தொடங்கினர். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகமானது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் வரிசையாக கோவிலின் உள்ளே செல்வதற்கு வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பக்தர்களை ஒழுங்குபடுத்தினர்.
பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அகண்டதாரக ராமநாம ஜபம் நடந்தது. மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இன்னிசை கச்சேரி நடந்தது. இரவு 9 மணிக்கு மேல் சாமி திருவீதி உலா நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
இதேபோல் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு 10 ஆயிரத்து 8 வடை மாலையும், 10 ஆயிரத்து 8 ஜாங்கிரி மாலையும் சாற்றப்பட்டன. மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மேலும் திருச்சியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
மண்ணச்சநல்லூர் பகுதியில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று ஆஞ்சநேயர் கோவில்களில் சாமிக்கு வடை மாலை சாற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கோபுரப்பட்டியில் உள்ள ஆதிநாயக பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு நேற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஆயிரத்து 8 வடை மாலை சாற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
துறையூரில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, அனுமனுக்கு பால், பஞ்சாமிர்தம், தேன், திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருச்சி சாலையில் உள்ள அனுமன் கோவிலில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அனுமனுக்கு வடை மாலை சாற்றப்பட்டது. மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் அனுமன் வீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.
உப்பிலியபுரத்தில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை விஸ்வரூப தரிசனம், பகவத் அனுக்ஞை, திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை ஆகியவை நடைபெற்றன. பின்னர் கும்ப அலங்காரம், சதுர்வேத மந்திரம், சுதர்சன மந்திரம், ஆஞ்சநேயர் திருமஞ்சனம், அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன. மதியம் மந்திர புஷ்பம், கும்பம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விஸ்வரூப ஆஞ்சநேயர் வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story