வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்த வியாபாரிக்கு ஆயுள் தண்டனை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்த வியாபாரிக்கு ஆயுள் தண்டனை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 Jan 2019 4:15 AM IST (Updated: 6 Jan 2019 4:01 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்த வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை,

வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்த வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

சிறுமி கற்பழிப்பு

மும்பை போரிவிலி பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சிறுமியின் வீட்டுக்கு பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரி வசந்த் (வயது48) வந்தார். அவர் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து அவளது வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர் சிறுமியின் வாயை பொத்தி கற்பழித்தார்.

இந்தநிலையில் விளையாட சென்று இருந்த சிறுமியின் 4 வயது தம்பி வந்தான். சிறுவன் வந்ததும் வசந்த் அங்கு இருந்து ஓடிவிட்டார். இந்தநிலையில் சிறுமியின் உடலில் இருந்து ரத்தம் வருவதை பார்த்து சிறுவன் அதிர்ச்சி அடைந்தான். அவன் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பாட்டியிடம் இதுகுறித்து கூறினான். உடனடியாக பாட்டி அங்கு வந்து சிறுமியிடம் விசாரித்தார். அப்போது சிறுமி தனக்கு நடந்த அவலம் குறித்து பாட்டியிடம் கூறினாள். பின்னர் இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

ஆயுள் தண்டனை

போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தை கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை ‘போக்சோ’ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

இதில் வழக்கை விசாரித்த கோர்ட்டு சிறுமியை கற்பழித்த வசந்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது.

Next Story