உயிரிழந்தவரின் வங்கிக்கணக்கில் ரூ.10½ லட்சம் மோசடி ஒருவர் கைது
உயிரிழந்த கப்பல் கேப்டனின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.10½ லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
உயிரிழந்த கப்பல் கேப்டனின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.10½ லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
கப்பல் கேப்டன்
மும்பை கோவண்டி சயான் - டிராம்பே சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ரால்ப் சவுதின்கோ (வயது57). தனியார் கப்பல் கேப்டனாக இருந்தார். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உயிரிழந்தார்.
இந்தநிலையில் சமீபத்தில் ரால்ப் சவுதின்கோவின் தம்பி ரொனால்டு கனடாவில் இருந்து மும்பை வந் தார். அவர் அண்ணனின் செல்போனை ஆன் செய்தார். அப்போது ரால்ப் சவுதின்கோ உயிரிழந்த பிறகு அவரது 2 வங்கிக்கணக்குகளில் இருந்து ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் எடுக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
2 ஏ.டி.எம். கார்டு திருட்டு
பின்னர் அவர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:-
ரால்ப் சவுதின்கோ உயிரிழந்தவுடன் அவரது வீட்டை சுத்தம் செய்ய குர்லாவை சேர்ந்த இஸ்மாயில் (39) உள்ளிட்ட 4 பேர் சென்றுள்ளனர். இதில் இஸ்மாயில் மற்றும் அவனது கூட்டாளி ஒருவர் ரால்ப் சவுதின்கோவின் 2 ஏ.டி.எம். கார்டுகளை திருடி உள்ளனர். பின்னர் அந்த கார்டுகளை பயன்படுத்தி பல்வேறு தவணைகளாக வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இஸ்மாயிலை கைது செய்தனர். மேலும் அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story