கும்மிடிப்பூண்டியில் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கோணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது.
கும்மிடிப்பூண்டி,
தினமும் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும் இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கண்ட சங்கத்தின் தலைவரும், தி.மு.க. மாவட்டச் செலாளருமான கும்மிடிப்பூண்டி கி.வேணு தொடங்கி வைத்தார். சங்கத்தின் பொதுச்செயலாளர் மணிபாலன், துணை பொதுச்செயலாளர் பாஸ்கரன், தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெண் தொழிலாளர்கள் உள்பட பலர் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றுள்ளனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலை முன்பு நடைபெறும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பிற்காக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
இங்கு பெண் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், 5 முதல் 10 ஆண்டுகளாக பணி புரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட கோரியும், தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு உரிய போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி தொகுதி பொதுத்தொழிலாளர்கள் முன்னேற்றச்சங்கத்தின் சார்பில் மேற்கண்ட தொழிற்சாலை முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
தினமும் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும் இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கண்ட சங்கத்தின் தலைவரும், தி.மு.க. மாவட்டச் செலாளருமான கும்மிடிப்பூண்டி கி.வேணு தொடங்கி வைத்தார். சங்கத்தின் பொதுச்செயலாளர் மணிபாலன், துணை பொதுச்செயலாளர் பாஸ்கரன், தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெண் தொழிலாளர்கள் உள்பட பலர் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றுள்ளனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலை முன்பு நடைபெறும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பிற்காக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story