நாகர்கோவிலில் பயங்கரம்: செல்போன் தகராறில் வாலிபர் அடித்துக்கொலை நண்பர் கைது
நாகர்கோவிலில் செல்போன் தகராறில் வாலிபரை அடித்துக்கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் கீழ மறவன் குடியிருப்பை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் ராஜேஷ் (வயது 21), தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த பபின் (வயது 18) என்பவரும் நண்பர்கள் ஆவர். இவரும் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜேஷின் செல்போனை அவருடைய நண்பரான பபின் வாங்கியதாக தெரிகிறது. பின்னர் அந்த செல்போனை ராஜேஷிடம் கொடுக்க அவர் மறுத்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து ராஜேஷ், தன் சகோதரர் மற்றும் தாயுடன் சென்று பபினிடம் இருந்து செல்போனை வாங்கினார். அதன்பிறகு 2 பேரும் மீண்டும் நண்பர்களானார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ராஜேசும், பபினும் சேர்ந்து அங்குள்ள ஒரு கோவில் முன் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது செல்போன் தொடர்பாக 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு நடந்தது. அப்போது 2 பேருமே மதுபோதையில் இருந்ததால், அவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது
இதனால் ஆத்திரம் அடைந்த பபின் திடீரென ராஜேசை கீழே தள்ளி விட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியதாகவும், அதோடு விடாமல் உயிருக்கு போராடி கொண்டிருந்த ராஜேஷின் கழுத்தில் பபின் கடுமையாக மிதித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த ராஜேஷ் அங்கேயே வெகு நேரமாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இச்சம்பவம் நடந்த பகுதி ஆள் நடமாட்டம் குறைந்த பகுதி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும் ராஜேஷ் படுகாயங்களுடன் கிடந்த சம்பவம் உடனே யாருக்கும் தெரியவில்லை. வெகுநேரம் கழித்து அந்த வழியாக சென்ற சிலர் ராஜேசை பார்த்துள்ளனர். உடனே இதுகுறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று ராஜேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே ராஜேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ராஜேஷின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதைத் தொடர்ந்து பபினை போலீசார் கைது செய்தனர். செல்போன் தகராறு காரணமாக வாலிபரை நண்பரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story