தஞ்சை கீழவாசல் பகுதியில் கழிவு நீர் கலந்த குடிநீர் வினியோகம் பொதுமக்கள் பீதி
தஞ்சை கீழவாசல் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
தஞ்சாவூர்,
51 வார்டுகளை கொண்ட தஞ்சை மாநகராட்சியில், 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். தஞ்சை மாநகராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக, தஞ்சையை அடுத்த திருமானூரில் கொள்ளிடம் ஆறு அருகே நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள நீரேற்று நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ‘கஜா’ புயலுக்குப்பின் தஞ்சை கீழவாசல், சிக்காரிஅம்மன் கோவில் தெரு, பாம்பாட்டிதெரு போன்ற பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீரில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவுமோ என மக்கள் பீதியில் உள்ளனர்.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாய் நிரம்பி அதன் மூலமாக கழிவு நீர் குடிநீருடன் கலந்து விடுவதாக கூறப்படுகிறது. இதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழவாசல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Related Tags :
Next Story