ரேசன் கடைகளில் நாள் ஒன்றுக்கு 300 கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்


ரேசன் கடைகளில் நாள் ஒன்றுக்கு 300 கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
x
தினத்தந்தி 7 Jan 2019 4:00 AM IST (Updated: 7 Jan 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

ரேசன் கடைகளில் நாள் ஒன்றுக்கு 300 கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டி, 

ரேசன் கடைகளில் நாள் ஒன்றுக்கு 300 கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு

கோவில்பட்டியை அடுத்துள்ள இனாம் மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். கூட்டுறவு இணை பதிவாளர் அருளரசு வரவேற்றார். நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்க தலைவர் மகேஷ்குமார் முன்னிலை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, ‘தூத்துக்குடி மாவட்டத்தில் 4 லட்சத்து 84 ஆயிரத்து 550 ரேசன் கார்டுதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு பொங்கல் பரிசு, பணம், வேட்டி, சேலை ஆகியவை வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் பரிசு 7-ந்தேதி தொடங்கி வருகிற 12-ந்தேதிக்குள் வழங்கப்படும். ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் நாள் ஒன்றுக்கு 300 கார்டுதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க துணை தலைவர் இல்லறஜோதி, செயலாளர் வேல்ராஜ், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், நெல்லை- தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், சின்னப்பன், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் பரமசிவன், பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள் கிரி, முருகானந்தம், நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன் மற்றும் பலர்கலந்து கொண்டனர்.

எட்டயபுரம்

இதனையடுத்து கோவில்பட்டி லாயல்மில் காலனியில் உள்ள மினி சூப்பர் மார்கெட் ரேசன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மார்கெட் தலைவர் வக்கீல் ரத்தினராஜா, துணை தலைவர் செண்பகமூர்த்தி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அதே போல் எட்டயபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வைத்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. எட்டயபுரம் நகர செயலாளர் ஆழ்வார் உதயகுமார் தலைமை தாங்கினார். அமைச்சர் கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் வதனாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புதிய நிழற்குடை

கயத்தாறு தாலுகா குப்பனாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சொக்கலிங்கபுரத்தில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று காலையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கினார். புதிய பயணிகள் நிழற்குடையை அமைச்சர் திறந்து வைத்தார்.

அப்போது அமைச்சர் பேசுகையில்,‘ தண்ணீர் வசதியின்றி தவிக்கும், கயத்தாறு தாலுகாவில் உள்ள 162 கிராம மக்களுக்கு ரூ.10 கோடி செலவில் விரைவில் கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்பட உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும், என்றார்.

யார்-யார்?

இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர், நெல்லை- தூத்துக்குடி ஆவின் தலைவர், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, கோவில்பட்டி உதவி கலெக்டர், தாசில்தார் லிங்கராஜ், மண்டல தாசில்தார் பாஸ்கரன், யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துகுமார், சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story