விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு


விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
x
தினத்தந்தி 7 Jan 2019 4:15 AM IST (Updated: 7 Jan 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என விழிப்புணர்வு கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன் கூறினார்.

க.பரமத்தி,

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சின்னதாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுக்க கடைகள், தொழிற்சாலைகள், கோவில்கள், சந்தைகள், பஸ் நிறுத்தம், திருமண மண்டப நுழைவு வாயில், மருத்துவ மனைகள், பள்ளிகள், கல்லூரிகள், முக்கிய தெருக்களின் நுழைவுவாயில், 3,4 ரோடுகள் சந்திக்கும் இடம், பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா (சி.சி.டி.வி.) பொருத்த வேண்டும். மேலும் விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கடை உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், கோவில் அர்ச்சகர்கள், டாக்டர்கள், பள்ளி, கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா அனைவரையும் வரவேற்றார். முடிவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் நன்றி கூறினார்.

Next Story