14 வாரியங்களுக்கு தலைவர்கள் நியமனம் கர்நாடக அரசு உத்தரவு
14 வாரிய தலைவர்களை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,
14 வாரிய தலைவர்களை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடும் அதிருப்தி
கர்நாடக மந்திரிசபை கடந்த மாதம் (டிசம்பர்) விரிவாக்கம் செய்யப்பட்டது. 8 மந்திரிகள் புதிதாக நியமிக்கப்பட்டனர். மந்திரி பதவி கிடைக்காத 20 எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர்கள் பதவி வழங்குவதாக காங்கிரஸ் உறுதி அளித்தது. அதன்படி 19 எம்.எல்.ஏ.க்களின் பெயர்களை முதல்-மந்திரி குமாரசாமிக்கு காங்கிரஸ் அனுப்பி வைத்தது. ஆனால் அதற்கு குமாரசாமி ஒப்புதல் வழங்காமல் இருந்து வந்தார். இதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். சித்தராமையாவை சந்தித்து அவர்கள் தங்களின் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் 14 வாரிய தலைவர்களை கர்நாடக அரசு நியமித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
லட்சுமி ஹெப்பால்கர்
1. சங்கமேஸ்வர் எம்.எல்.ஏ.-கர்நாடக கிராமப்புற அடிப்படை வசதிகள் வளர்ச்சி வாரிய தலைவர், 2. ஆர்.நரேந்திரா எம்.எல்.ஏ.-கர்நாடக உணவு வாரிய தலைவர், 3. நாராயண் ராவ் எம்.எல்.ஏ.-கர்நாடக வன வளர்ச்சி வாரிய தலைவர், 4. உமேஷ் ஜாதவ் எம்.எல்.ஏ.-கர்நாடக கிடங்கு வாரிய தலைவர், 5. ரகுமூர்த்தி எம்.எல்.ஏ.-ஹட்டி தங்க சுரங்க வாரிய தலைவர், 6. யஷ்வந்தராயகவுடா பட்டீல் எம்.எல்.ஏ.-கர்நாடக நகர நீர் வாரிய தலைவர், 7. பசவராஜ் எம்.எல்.ஏ.-கர்நாடக சாபூனு வாரிய தலைவர், 8. பி.சிவண்ணா எம்.எல்.ஏ.-மின்னணு வாரிய(கியோனிக்ஸ்) தலைவர், 9. நாராயணசாமி-பி.ஆர்.அம்பேத்கர் வளர்ச்சி வாரிய தலைவர், 10. முனிரத்னா எம்.எல்.ஏ.-கர்நாடக தொழிற்பயிற்சி வளர்ச்சி வாரிய தலைவர், 11. சிவராம் ஹெப்பார் எம்.எல்.ஏ.-வடமேற்கு அரசு போக்குவரத்து கழக தலைவர், 12. சுரேஷ் எம்.எல்.ஏ.-கர்நாடக மாநில சிறுதொழில் வளர்ச்சி வாரிய தலைவர், 13. லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ.-கர்நாடக கனிம வளர்ச்சி வாரிய தலைவர், 14. ராஜூகவுடா எம்.எல்.ஏ.-மலைநாடு பகுதி வளர்ச்சி வாரிய தலைவர்.
ஒப்புதல் வழங்கவில்லை
காங்கிரஸ் கட்சி 19 பேரின் பெயர் பட்டியலை வழங்கியது. ஆனால் முதல்-மந்திரி குமாரசாமி, 14 வாரிய தலைவர்களை மட்டுமே நியமித்துள்ளார். பெங்களூரு வளர்ச்சி ஆணையம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட முக்கியமான 5 வாரியங்களின் தலைவர்கள் நியமனத்திற்கு குமாரசாமி ஒப்புதல் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இந்த வாரிய தலைவர்களுக்கு, மந்திரிக்கு இணையான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மந்திரிக்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும் அவர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
நாடாளுமன்ற செயலாளர்கள்...
மேலும் எம்.எல்சி.க்கள் அப்துல் ஜப்பார், ஐவான் டிசோசா, கோவிந்தராஜ், எம்.எல்.ஏ.க்கள் அஞ்சலி ஹேமந்த் நிம்பல்கர், கவுசலகி மகாந்தேஷ் சிவானந்த், ரூபா கலா சசீதர், ராகவேந்திர பசவராஜ் எத்தனால், பி.எஸ்.ஹொலகேரி ஆகிய 8 பேரும் நாடாளுமன்ற செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story