போடியில், பணியில் இருந்தபோது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு


போடியில், பணியில் இருந்தபோது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
x
தினத்தந்தி 7 Jan 2019 4:00 AM IST (Updated: 7 Jan 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

போடியில் பணியில் இருந்தபோது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போடி, 

போடியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 51). இவர் போடி நகர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை அவர் போடியில் கட்டபொம்மன் சிலை அருகே போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்துபோன முருகேசனுக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். பணியில் இருந்தபோது மாரடைப்பால் சப்-இன்ஸ்பெக்டர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற் படுத்தி உள்ளது. 

Next Story