பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவை ரத்து; பயணிகள் கடும் அவதி
பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
மும்பை,
பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
பராமரிப்பு பணி
மத்திய ரெயில்வே வழித்தடமான முல்லுண்டு - மாட்டுங்கா இடையே ஸ்லோ வழித்தடத்தில் நேற்று காலை முதல் மாலை வரை பராமரிப்பு பணிகள் நடந்தது. எனவே நேற்று சி.எஸ்.எம்.டி. நோக்கி வந்த ஸ்லோ ரெயில்கள் முல்லுண்டு - மாட்டுங்கா இடையே விரைவு வழித்தடத்தில் இயக்கப்பட்டது.
அப்போது ரெயில்கள் நாகுர், காஞ்சூர்மார்க், வித்யாவிகார் ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்கவில்லை. மேலும் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் நேற்று மத்திய ரெயில்வே வழித்தட ரெயில்களில் கூட்டம் அலை மோதியது.
கடும் அவதி
மேற்கு ரெயில்வே வழித்தடத்திலும் பராமரிப்பு பணி காரணமாக சில ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. மேலும் ரெயில்கள் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன.
இதேபோல துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி. - வாஷி, பேலாப்பூர், பன்வெல் மற்றும் சி.எஸ்.எம்.டி. - கோரேகாவ், அந்தேரி, பாந்திரா இடையே நேற்று காலை முதல் மாலை வரை ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் நேற்று மின்சார ரெயில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
Related Tags :
Next Story