அரசு ஊழியர்களை தாக்கினால் 5 ஆண்டு ஜெயில்: சட்டத்திருத்தத்தை மறுஆய்வு செய்ய கமிட்டி அமைப்பு
அரசு ஊழியர்களை தாக்கினால் 5 ஆண்டு ஜெயில் என்ற சட்டத்திருத்தத்தை மறுஆய்வு செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
மும்பை,
அரசு ஊழியர்களை தாக்கினால் 5 ஆண்டு ஜெயில் என்ற சட்டத்திருத்தத்தை மறுஆய்வு செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டு ஜெயில்
மராட்டியத்தில் அரசு ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மும்பையில் போக்குவரத்து போலீசார் அதிகளவில் தாக்கப்படுகின்றனர். இதையடுத்து அரசு ஊழியர்களை தாக்குபவர்கள், பணி செய்யவிடாமல் தடுப்பவர்களுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கும் சட்டத்திருத்தம் கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இதற்கு முன் அரசு ஊழியர்களை தாக்குபவர்களுக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கப்பட்டு வந்தது.
இதேபோல சட்டத்திருத்தத்தில் அரசு ஊழியர்களை தாக்கும் கவுன்சிலர், எம்.எல்.ஏ, எம்.பி. உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் 5 ஆண்டு ஜெயில் தண்டனை என கூறப்பட்டு இருந்தது.
கமிட்டி அமைப்பு
இந்தநிலையில் சமீபத்தில் இந்த சட்டத்திருத்தத்துக்கு சட்டசபை இரு அவைகளிலும் எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபோன்ற சட்டத்தால் அரசு ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகளை மதிக்க மாட்டார்கள் என எம்.எல்.ஏ.க்கள் கூறினர்.
இதையடுத்து அரசு ஊழியர்களை தாக்குபவர்களுக்கு 5 ஆண்டு ஜெயில் என்ற சட்டத்திருத்தத்தை மறு ஆய்வு செய்ய மாநில உள்துறை, கமிட்டி ஒன்றை அமைத்து உள்ளது.
இந்த கமிட்டியில் சட்டமன்ற இரு அவைகளின் எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித் பவார் உள்ளிட்ட 12 பேர் உள்ளனர்.
Related Tags :
Next Story