பெல் நிறுவனத்தில் 672 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் : ஐ.டி.ஐ., டிப்ளமோ என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம்


பெல் நிறுவனத்தில் 672 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் : ஐ.டி.ஐ., டிப்ளமோ என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 7 Jan 2019 9:40 AM GMT (Updated: 2019-01-07T15:10:08+05:30)

பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக ‘பெல்’ என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி உள்பட நாடுமுழுவதும் இந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்படுகின்றன.

தற்போது இதன் கிளை நிறுவனங்களில் 2019-ம் ஆண்டுக்கான அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கான ஆட்சேர்க்கை நடக்கிறது. போபால் கிளையிலும், ஹரித்துவார் கிளையிலும் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. போபாலில் 229 பணியிடங்களும், ஹரித்து வாரில் 443 இடங்களும் உள்ளன.

போபாலில் உள்ள பணியிடங்களில் டிப்ளமோ என்ஜினீயர்களும், பட்டதாரி என்ஜினீயர்களும் சேர்க்கப்படுகிறார்கள். பட்டதாரிகளுக்கு 138 இடங்களும், டிப்ளமோ படித்தவர்களுக்கு 91 இடங்களும் உள்ளன. 1-1-2019-ந் தேதியில் 14 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஜனவரி 21-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரத்தை https://www.bhelbpl.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

ஹரித்துவாரில் உள்ள பெல் கிளையில் 443 பேர் அப்ரண்டிஸ் பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள். டிரேடு அப்ரண்டிஸ் பணிகளான இவற்றில் 10-ம் வகுப்பு படிப்புடன், ஐ.டி.ஐ. படித்தவர்கள் சேர்க்கப்படு கிறார்கள். விண்ணப்பதாரர்கள் 1-4-2019-ந் தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக ஜனவரி 13-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விவரத்தை careers.bhelhwr.co.in/recruitment/main.html என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Next Story