அய்யம்பேட்டை அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி சாவு


அய்யம்பேட்டை அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 8 Jan 2019 3:45 AM IST (Updated: 8 Jan 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

அய்யம்பேட்டை அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

அய்யம்பேட்டை,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள புரசக்குடி குடியான தெருவை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் சரவணன் (வயது 28). தொழிலாளி. இவருடைய மனைவி புஷ்பா (25). இவர்களுக்கு திருமணமாகி 1 ஆண்டு ஆகிறது. புஷ்பா 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சரவணன் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அய்யம்பேட்டை- சூலமங்கலம் சாலையில் முனியாண்டவர் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு, படுகாயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story