ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Jan 2019 10:45 PM GMT (Updated: 2019-01-08T02:37:45+05:30)

திருச்சி ஜங்ஷனில் கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகம் முன்பு டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி,

திருச்சி ஜங்ஷனில் கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகம் முன்பு டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் மொய்தீன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் வெங்கடேசன், கூடுதல் செயலாளர் மாதவன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ரெயில்வே உள்பட அனைத்து பொதுத்துறைகளை தனியார் மயமாக்குதலை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், இன்றும் (செவ்வாய்க் கிழமை), நாளையும் (புதன்கிழமை) மத்திய தொழிற்சங்கத்தினர் நடத்துகின்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த ரெயில்வே ஊழியர்களும், ஆர்.எம்.எஸ். தொழிற்சங்கத்தினரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story