பணியின் போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வருவாய்த்துறையில் பணிநியமன ஆணை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
தூத்துக்குடி மாவட்ட வருவாய்த்துறையில் பணியின் போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு பணிநியமன ஆணையை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வழங்கினார்.
தூத்துக்குடி,
தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் வருவாய் துறையில் பணியாற்றி பணியின் போது உயிர் இழந்த 8 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணி நியமன ஆணையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
அதன் பின்னர், இந்தியா ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பாக கடந்த மாதம் நாக்பூரில் நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 4 முதல் 16 வயதிற்கு மேற்பட்ட 9 ஸ்கேட்டிங் வீரர்கள் தாங்கள் பெற்ற பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன், மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, உதவி கலெக்டர் (பயிற்சி) லாவண்யா மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story