தனித்தனி சம்பவத்தில் தீயில் கருகி 2 மாணவிகள் சாவு
தனித்தனி சம்பவத்தில் தீயில் கருகி 2 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சாத்தியம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகள் கார்த்திகா (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று கார்த்திகா, தனது வீட்டில் கொசுவர்த்தியை பற்ற வைத்து அதனை அருகில் வைத்துவிட்டு படுத்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பற்றியது. இதில் அவரது உடல் முழுவதும் தீக்காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கார்த்திகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் ராமநத்தம் அருகே வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் சேகர் மகள் சினேகா (16). இவர் தொழுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். அடிக்கடி வீட்டில் செல்போனை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததால் சினேகாவை அவரது தாய் அறிவழகி கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த சினேகா சம்பவத்தன்று உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் தீக்காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சினேகா நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story