சில வாரிய தலைவர்கள் நியமனத்தை நிறுத்தி வைத்தது குறித்து முதல்-மந்திரி குமாரசாமியிடம் பேசுவேன் சித்தராமையா பேட்டி
சில வாரிய தலைவர் களின் நியமனத்தை நிறுத்தி வைத்தது குறித்து முதல்-மந்திரி குமார சாமியிடம் பேசுவேன் என்று சித்தராமையா கூறினார்.
உப்பள்ளி,
முன்னாள் முதல்-மந்திரியும், கர்நாடக கூட்டணி ஆட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
குமாரசாமியிடம் பேசுவேன்
காங்கிரஸ் கட்சி சார்பில் 19 வாரிய தலைவர்கள் நியமனத்திற்கு பெயர் பட்டியல் முதல்-மந்திரி குமாரசாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சில வாரிய தலைவர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதுகுறித்து குமாரசாமியுடன் பேசுவேன்.
விதான சவுதாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை சேர்ந்த ஊழியரிடம் இருந்து ரூ.25.80 லட்சம் சிக்கியது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மந்திரி புட்டரங்கஷெட்டி மீதான குற்றச்சாட்டு இன்னும் நிரூபிக்கப்படவில்லை. மந்திரியிடம் பணம் சிக்கியதா?. அவரிடம் பணம் சிக்காமல் இருக்கும்போது, அவர் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்?.
நம்பிக்கை இல்லை
ஊழல் தடுப்பு படை விசாரணையில் நம்பிக்கை இல்லை என்று பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். குழந்தைகள் எந்த மொழி வழியில் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை அந்தந்த மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.
குழந்தைகள் எந்த மொழியில் கல்வி பயில வேண்டும் என்பதை பெற்றோேர முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. இதனால் கன்னடம் மட்டுமின்றி நாட்டில் 22 மண்டல மொழிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்-மந்திரிகளின் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story