யானை தாக்கி பலியான வனக்காவலர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்


யானை தாக்கி பலியான வனக்காவலர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
x
தினத்தந்தி 8 Jan 2019 4:30 AM IST (Updated: 8 Jan 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

யானை தாக்கி பலியான வனக்காவலர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தேன்கனிக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தாவரக்கரை என்ற இடத்தில் 7 யானைகள் முகாமிட்டிருந்தன. அதை விரட்டும் பணியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது ஒரு யானை வன ஊழியர்களை விரட்டியது. இதில் வனக்காவலர் மாரப்பா (வயது 55) என்பவரை யானை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த மாரப்பா, தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊரான கோட்டட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, சமூக காடுகள் கோட்ட அலுவலர் ராஜ் குமார், தாசில்தார் வெங்கடேசன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் ராஜ், தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி, உரிகம், ராயக்கோட்டை, ஓசூர் ஆகிய வனச்சரகத்தை சேர்ந்த வன ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வனக்காவலர் மாரப்பா உடல் அடக்கம் செய்யப்பட்டது. யானை தாக்கி இறந்த மாரப்பா குடும்பத்திற்கு அரசு சார்பில் முதல் கட்டமாக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும் ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க பரிந்துரைக்கப்படும் என்றும், வாரிசு அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story