பராமரிப்பு பணிக்காக 22 நாட்கள் விமான நிலையம் மூடப்படுகிறது
பராமரிப்பு பணிக்காக மும்பை விமான நிலையம் 22 நாட்கள் விமான நிலையம் மூடப்படுகிறது.
மும்பை,
மும்பை விமான நிலையம் டெல்லியை அடுத்து பரபரப்பாக காணப்படும் நாட்டின் 2-வது பெரிய விமான நிலையம் ஆகும். அங்கு தினசரி 970 விமானங்கள் வந்து செல்கின்றன. மெயின் ஓடு தளத்தில் மணிக்கு 48 விமானங்களும், செகண்டரி ஓடுதளத்தில் 35 விமானங்களும் கையாளப்பட்டு வருகின்றன. ஓடுதளத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் பணிக்காக வருகிற பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் மாதம் (21-ந்தேதி தவிர) 30-ந்தேதி வரை வாரந்தோறும் செவ்வாய், வியாழன், சனிக்கிழமை என 22 நாட்கள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை 6 மணி நேரம் விமான நிலையம் மூடப்பட உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story