விபத்து வழக்கில் திடீர் திருப்பம் குடும்பத்தகராறில் கார் ஏற்றி டெய்லர் கொலை மனைவியின் சகோதரர் கைது
விபத்து வழக்கில் திடீர் திருப்பமாக குடும்பத் தகராறில் டெய்லர், கார் ஏற்றி கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக அவரது மனைவியின் சகோதரரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி,
ஆவடி புதுநகரை சேர்ந்தவர் முபாரக் அலி (வயது 38). டெய்லராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சபூர் நிஷா (32) இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் முபாரக் அலி வெளிநாட்டு வேலைக்கு செல்ல விசா வந்துள்ளது. ஆனால் அவர் வெளிநாடு போகாமல் மது அருந்தி விட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.
இதனால் கடந்த மாதம் 10-ந் தேதி இரவு கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது சபூர் நிஷா சென்னை பாடி, டி.என்.பி. நகரைச் சேர்ந்த தனது அண்ணன் சதக்கதுல்லா (33) மற்றும் சென்னை அமைந்தகரை பகுதியில் வசிக்கும் தம்பி அப்துல் ரகுமான் (28) ஆகியோரிடம் தனது கணவர் தன்னை அடிப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அன்று இரவு சதக்கதுல்லா, அப்துல் ரகுமான் ஆகியோர் காரில் ஆவடிக்கு வந்து, முபாரக் அலியை தட்டி கேட்டதாக தெரிகிறது. இதில் வாக்குவாதம் முற்றி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது முபாரக் அலி கல்லால் கார் கண்ணாடியை உடைத்து விட்டு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்று விட்டார்.
நள்ளிரவு 12 மணிக்கு ஆவடி காமராஜர் நகர் வழியாக சென்றபோது சதக்கதுல்லா, அப்துல் ரகுமான் இருவரும் காரில் சென்று முபாரக் அலி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சென்று விட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற சசிகுமார் என்பவர் இதை பார்த்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சிவப்பு நிற கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சென்றதாக கூறியுள்ளார். இதையடுத்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயம் அடைந்த முபாரக் அலியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த முபாரக் அலி சிகிச்சை பலன் இன்றி கடந்த மாதம் 14-ந் தேதி இறந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், குடிபோதையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து நடந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு ஆவடி போலீசுக்கு மாற்றப்பட்டது. ஆவடி போலீசார் விசாரணை செய்ததில் திடீர் திருப்பமாக சிவப்பு நிற கார் யாருடையது? என்று விசாரித்தனர். அப்போது, சதக்கதுல்லா, அப்துல் ரகுமான் ஆகியோர் வந்ததும் சிவப்பு நிற கார் என்பதால் சதக்கதுல்லாவை அழைத்து விசாரித்ததில் உண்மை தெரியவந்தது.
சதக்கதுல்லாவும், அவரது தம்பியும் சேர்ந்து காரை ஏற்றி டெய்லர் முபாரக் அலியை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து ஆவடி போலீசார் விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து சதக்கதுல்லாவை கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அப்துல் ரகுமானை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story