வீடு தருவதாக ஆசிரியையிடம் ரூ.70 லட்சம் மோசடி; கட்டுமான அதிபர் கைது


வீடு தருவதாக ஆசிரியையிடம் ரூ.70 லட்சம் மோசடி; கட்டுமான அதிபர் கைது
x
தினத்தந்தி 8 Jan 2019 9:45 PM GMT (Updated: 8 Jan 2019 9:28 PM GMT)

வீடு தருவதாக ஆசிரியையிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த கட்டுமான அதிபர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை மலாடு மேற்கு பகுதியில் ஹிரன் ஷா (வயது46) என்ற கட்டுமான அதிபர் குடிசை சீரமைப்பு திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வந்தார். அவரிடம் 2 வீடுகளுக்கு 50 வயது ஆசிரியை ஒருவர் ரூ.70 லட்சம் கொடுத்து இருந்தார்.

இந்தநிலையில் ஹிரன் ஷா அந்த கட்டிடத்தை கட்ட தாமதம் செய்ததால் அந்த பணி வேறு ஒரு கட்டுமான அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அவரால் ஆசிரியையிடம் வாங்கிய பணத்திற்கு 2 வீடுகளை கொடுக்க முடியவில்லை. மேலும் அதற்கான பணத்தையும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் ஆசிரியை இதுகுறித்து கோரேகாவ் போலீசில் புகார் அளித்தார்.

கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக ஹிரன் ஷா செசன்ஸ் மற்றும் ஐகோர்ட்டை அணுகினார். இரண்டு கோர்ட்டுகளிலும் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார்.

போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கோரேகாவில் உள்ள அவரது தாய் வீட்டில் பதுங்கி இருந்த ஹிரன் ஷாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத் தினார்கள். கோா்ட்டு அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

Next Story