வானவில்: எல்லாவற்றையும் காகிதமாக்கும் ‘பிரீ ’
நமது ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் கருவிகளில் தட்டச்சு முறையிலேயே தேடுதல் அல்லது மெயில் அனுப்புதல் என்று அனைத்து பயன்பாடுகளையும் செய்து வருகிறோம்.
எல்லா நேரத்திலும் அது வசதியாக இருப்பதில்லை. பிழைகளும் அதிகமாக ஏற்படும். நாம் கைப்பட எழுதுவது திரையில் தோன்றினால் எப்படி இருக்கும் என்கிற எண்ணத்தை நிறைவேற்றி இருக்கிறது ‘பிரீ’ என்கிற இந்த பாக்கெட் சைஸ் கருவி.
இதுதான் உலகிலேயே சிறிய முப்பரிமாண லேசர் கருவி என்கின்றனர் இதனை தயாரித்தவர்கள். இந்த பேனாவை கொண்டு நீங்கள் எதை வேண்டுமானாலும் எழுதலாம். நாம் எழுதுவது புளூடூத் கருவியின் திரையிலும் தோன்றும். காகிதத்தில், உடையில், சுவற்றில் என்று பிரீயைக் கொண்டு எதிலும் எழுதலாம். நம்முடைய கற்பனைக்கு ஏற்ப வரைவது, வாழ்த்துகள் உருவாக்குவது, எழுதுவது என்று எதையும் செய்யலாம். நமது கையெழுத்திலேயே கடிதம் எழுதி ஈ-மெயிலும் அனுப்பலாம். அஞ்சலில் கடிதம் அனுப்பியதை மீண்டும் இம்முறையில் உருவாக்கி மகிழலாம். இதில் இருக்கும் டிஜிட்டல் இங்க் நமது போன் அல்லது டேப்லெட் திரைக்கு தகவல் அனுப்பி திரையில் தெரிய வைக்கிறது. விரைவாகவும், எளிதாகவும் இந்த ஸ்மார்ட் கருவிகளை இயக்க ‘பிரீ’ உதவுகிறது.
Related Tags :
Next Story