வானவில்: வீட்டிலேயே சுத்தமான மினரல் வாட்டர்


வானவில்: வீட்டிலேயே சுத்தமான மினரல் வாட்டர்
x
தினத்தந்தி 9 Jan 2019 2:52 PM IST (Updated: 9 Jan 2019 2:52 PM IST)
t-max-icont-min-icon

சமீபகாலமாக நகர்ப்புறங்களில் சுத்தமான குடிநீருக்கு, அதிக விலை தர வேண்டியுள்ளது. வீடுகளில் தண்ணீரை சுத்திகரிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் போதிய அளவு பயனுள்ளதாக இருப்பதில்லை.

 பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரில் போதிய கனிமச் சத்துகள் (மினரல்) நீக்கப்பட்டு தரப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனாலேயே நாம் பெரும்பாலும் சத்துகள் அற்ற தண்ணீரை அருந்தும் நிலைதான் உருவாகியுள்ளது. இந்தக் குறையைப் போக்கும் வகையில் வீட்டிலேயே சுத்தமான கனிமச் சத்து நிறைந்த குடிநீரை தயாரிக்க உதவுகிறது, மிட்டே மினரல் வாட்டர் இயந்திரம். இதில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதல் பகுதியானது நீங்கள் அனுப்பும் குடிநீரை சுத்தமானதாக மாற்றும். ஏற்கனவே பின்பற்றப்படும் குடிநீர் சுத்திகரிப்பு முறைகளுடன் ஒப்பிடும்போது இது நான்கு மடங்கு சிறந்ததாம். பிறகு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் அடுத்து கனிம சத்து நிறைந்த பகுதிகள் வழியாக வந்து கனிமசத்து நிறைந்த சுத்தமான குடிநீரை உங்களுக்கு அளிக்கிறது. 

கனிம சத்துகளுக்கென தனி கேட்ரெஜை இது அளிக்கிறது. தேவைக்கேற்ற கனிம சத்துகளை தேர்வு செய்யும் வசதியும் இதில் உள்ளது. ஒரு கேட்ரெஜ் மூலம் 400 லிட்டர் கனிம சத்து நிறைந்த குடிநீரைப் பெறலாம். சுண்ணாம்பு சத்து, கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீஸ், துத்தநாகம் உள்ளிட்ட கனிம சத்துகளை குடிநீரில் சேர்க்க முடியும். ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. இதன் விலை 429 யூரோவாகும்.

Next Story