தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் எதிரொலி கேரளா செல்லும் பஸ்கள் 2–வது நாளாக குமரி எல்லையில் நிறுத்தம்


தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் எதிரொலி கேரளா செல்லும் பஸ்கள் 2–வது நாளாக குமரி எல்லையில் நிறுத்தம்
x
தினத்தந்தி 10 Jan 2019 4:30 AM IST (Updated: 9 Jan 2019 8:32 PM IST)
t-max-icont-min-icon

தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டம் எதிரொலியாக கேரளா செல்லும் பஸ்கள் 2–வது நாளாக குமரி எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டன.

களியக்காவிளை,

நாடு முழுவதும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் சி.ஐ.டி.யு. உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. ஆனாலும், போக்குவரத்து அதிகாரிகள் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள 12 அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் இருந்தும் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. ஆனால் கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள் குமரி மாவட்டத்தின் எல்லை பகுதியான களியக்காவிளையில்      நிறுத்தப்பட் டது. இதே போல் கேரளாவில் இருந்தும் பஸ்கள் குமரி மாவட்டத்துக்கு இயக்கப்படவில்லை. 

இந்தநிலையில் நேற்று 2–வது நாளாக தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதன் எதிரொலியாக கேரளாவில் அரசு பஸ்கள் இயங்கவில்லை. அதேபோல் கேரளா செல்லும் தமிழக பஸ்களும் 2–வது நாளாக குமரி எல்லை பகுதியான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டன.

Next Story