திருத்துறைப்பூண்டியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 100-க்கும் மேற்பட்டோர் கைது
திருத்துறைப்பூண்டியில் தொழிற்சங்கங்கள் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டி,
தொழிலாளர் விரோத சட்டங்கள், புதிய ஓய்வூதியம் திட்டத்தை அமலாக்கம் செய்ய கூடாது. விலைவாசி உயர்வு, பொதுத்துறை நிறுவனங் களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது. வங்கிகளை இணைக்க கூடாது. குறைந்த பட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர் முறையை ஒழித்து நிரந்தர பணி வழங்க வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் நேற்றுமுன் தினம் தொடங்கியது.
இந்தநிலையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம், தி.மு.க.வின் தொ.மு.ச., காங்கிரஸ் கட்சியின் ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
100-க்கும் மேற்பட்டோர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் வல்லவராணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து, அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story