கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ரூ.3 கோடியே 40 லட்சம் செலவில் புதிய கட்டிடம்
கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ரூ.3 கோடியே 40 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
கோவை,
கோவை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இடநெருக்கடி காரணமாக, புதிய கட்டிடம் கட்டுவதற்கு அப்போதைய போலீஸ் கமிஷனராக பணியாற்றிய அமல்ராஜ் அரசிடம் அனுமதி கோரினார். கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய இணைப்பு கட்டிடம் கட்ட அரசு அனுமதி வழங்கியது. இதற்காக ரூ.3 கோடியே 40 லட்சம் நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. அதைத்தொடர்ந்து போலீஸ் ஹவுசிங் கார்ப்பரேஷன் மூலம் 11,172 சதுரஅடி பரப்பளவில் 4 தளங்களுடன் புதிய இணைப்பு கட்டிடம் கட்டப்பட்டது.
ஒவ்வொரு தளத்திலும் 5 அறைகள் கட்டப்பட்டு உள்ளன. லிப்ட் வசதி, கருத்தரங்க கூடம், கார் பார்க்கிங் வசதி, ஜெனரேட்டர் உள்ளிட் டவை அமைக்கப்பட்டு உள்ளன. நிர்வாக என்ஜினீயர் எஸ்.வி.சேகர் தலைமையில் உதவி என்ஜினீயர்கள் சீனிவாசன், கலைக்கோவன் ஆகியோர் மேற்பார்வையில் கட்டுமான பணிகள் நடைபெற்றது.
புதிய இணைப்பு கட்டிடத்தின் திறப்பு விழா இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெறுகிறது. இதை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் சுமித்சரண், துணை கமிஷனர்கள் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
Related Tags :
Next Story