மீஞ்சூர், ஆலப்பாக்கத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு


மீஞ்சூர், ஆலப்பாக்கத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு
x
தினத்தந்தி 10 Jan 2019 4:15 AM IST (Updated: 10 Jan 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூர், ஆலப்பாக்கத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.

பொன்னேரி,

பொன்னேரி தாலுகாவில் அடங்கிய கிருஷ்ணாபுரம், மணலிபுதுநகர், மீஞ்சூர் போன்ற இடங்களில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000–த்தை சிறுணியம் பலராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி வழங்கினார். பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார், தாசில்தார் புகழேந்தி, வட்ட வழங்கல் அலுவலர் காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்க தலைவர்கள் பானுபிரசாத், பட்டாபிராமன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

விழாவில் துணை தாசில்தார் செல்வகுமார், கூட்டுறவு சங்க இயக்குனர்கள் பொன்னுதுரை, மேலூர் சிவலிங்கம், சுந்தரம், கோபால், கூட்டுறவு சங்க செயலாளர் சங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செங்கல்பட்டை அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சியில் நடந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு மேலேரிப்பாக்கம் தொடக்க வேளாண்மை வங்கி தலைவரும் ஆலப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான கே.சல்குரு தலைமை தாங்கினார். அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சிங்கை எஸ்.கவுஸ்பாஷா, திருக்கழுக்குன்றம் விஜயரங்கன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக காஞ்சீபுரம் மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், மரகதம் குமரவேல் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கினார்கள்.


Next Story