தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்; 260 பேர் கைது பஸ்கள் வழக்கம்போல் ஓடின


தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்; 260 பேர் கைது பஸ்கள் வழக்கம்போல் ஓடின
x
தினத்தந்தி 10 Jan 2019 4:00 AM IST (Updated: 10 Jan 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து நாடுமுழுவதும் அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து நாடுமுழுவதும் அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. இந்த வேலைநிறுத்த போராட்டைத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பிலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முகமதலிஜின்னா, தொ.மு.ச. மாவட்ட தலைவர் ரெத்தினம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சிங்கமுத்து ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு. சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஜியாவுதீன், பாலசுப்பிரமணியன் உள்பட 260 பேரை புதுக்கோட்டை போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் போலீசார் விடுவித்தனர். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 700 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. மத்திய அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வராததால் நேற்றும் இயங்கவில்லை. ஆனால் மாநில அரசு ஊழியர்கள் தாங்கள் பணியாற்றும் அலுவலகங்களுக்கு பணியாளர்கள் வந்ததால் வழக்கம்போல் இயங்கின. கலெக்டர் அலுவலகத்தில் ஒரு சில துறை அலுவலகங்களின் அலுவலர்கள் குறைந்து காணப்பட்டனர். இதேபோல் உள்ளாட்சி துறை அலுவலர்கள் வழக்கம்போல் பணியாற்றினர். கடைகள் அடைக்கப்படவில்லை. அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. 

Next Story