மாவட்ட செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி திடீர் நிறுத்தம் 3 இடங்களில் மறியல்-போக்குவரத்து பாதிப்பு + "||" + Pongal Gift Package Offering A sudden stop in 3 places picket-traffic impact

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி திடீர் நிறுத்தம் 3 இடங்களில் மறியல்-போக்குவரத்து பாதிப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி திடீர் நிறுத்தம் 3 இடங்களில் மறியல்-போக்குவரத்து பாதிப்பு
தோகைமலை பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி திடீரென நிறுத்தப்பட்டதால் 3 இடங்களில் மறியல் நடந்தது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தோகைமலை,

பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதன்படி கரூர் மாவட்டம், தோகைமலை பகுதியில் உள்ள 20 ஊராட்சிகளிலும், கடந்த 2 நாட்களாக ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் தலா ரூ.ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.


நேற்றும் வழக்கம்போல் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புக்கு கோர்ட்டு தடை விதித்த தகவல் பரவியது. இதனால் தோகைமலை பகுதியில் திடீரென பொங்கல் பரிசு வழங்கும் பணி நிறுத்தப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உடனடியாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கவேண்டும் என கூறி, தோகைமலையில் உள்ள பாளையம்-திருச்சி மெயின் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை தாசில்தார் சுரேஷ்குமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நீதிமன்ற உத்தரவால் தற்காலிகமாக பொங்கல் பரிசு வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது. மறு உத்தரவு வந்தவுடன் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கொசூர் மற்றும் நாகனூரில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். தோகைமலை பகுதியில் 3 இடங்களில் மறியல் நடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. கள்ளூரில் ஜல்லிக்கட்டு; வீரர்கள், காளைகளுக்கு பரிசு
கள்ளூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வீரர்கள், காளைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
2. பாதுகாப்பாக வாகனம் ஓட்டினால் பரிசு
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் 100 ரூபாய் முதல் அபராதம் விதிப்பது வழக்கம்.
3. ‘சபாக்’ படத்தில் நடிக்கும் தீபிகாவிற்கு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரிசு
‘சபாக்’ படத்தில் நடிக்கும் தீபிகாவிற்கு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இதயப்பூர்வமான பரிசை வழங்கியுள்ளார்.
4. மாநில அளவிலான “ஸ்கேட்டிங்” போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
மாநில அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நடத்தப்பட்ட “ஸ்கேட்டிங்” போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
5. கிராமங்களில் 1½ லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் மத்திய மந்திரி பேச்சு
கிராமங்களில் 1½ லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே கூறினார்.