நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி பங்கீடு குறித்து காங்கிரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை தேவேகவுடா பேட்டி


நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி பங்கீடு குறித்து காங்கிரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை தேவேகவுடா பேட்டி
x
தினத்தந்தி 10 Jan 2019 3:39 AM IST (Updated: 10 Jan 2019 3:39 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தேவே கவுடா கூறினார்.

பெங்களூரு,

முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கருத்து கூறக்கூடாது

கூட்டணி ஆட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எம்.எல்.ஏ.க்கள் யாரும் கருத்து கூறக்கூடாது. குமாரசாமி கூட்டணி கட்சிகளின் தலைமையேற்று ஆட்சியை நடத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு 130 ஆண்டுகள் வரலாறு உள்ளது.

ஆனால் அந்த கட்சி சில மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்கிறது. பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக நான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறேன்.

விரைவில் பேச்சுவார்த்தை

மாநில கட்சியின் அவசியம் குறித்து இளைஞர்களுக்கு தெரிவிக்க வேண்டும். நாங்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். நாடாளுமன்ற ேதர்தல் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்படும்.

அடுத்த 3 நாட்களில் இதுபற்றி முடிவு எடுக்கப்படும். நான் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளேன் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. 29 ஆண்டுகள் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு சென்று வருகிறேன்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Next Story