பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்
பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பட்டிவீரன்பட்டி,
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படும். பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் பாரம்பரியமாக 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. இந்த ஆண்டு வருகிற 27 மற்றும் பிப்ரவரி 3 ஆகிய தேதிகளில் 2 இடங் களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்காக பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், எம்.வாடிப்பட்டி, முத்துலாபுரம், சித்தரேவு, சித்தையன்கோட்டை பகுதிகளில் காளைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக இந்த காளைகளுக்கு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
தினமும் காலை, மாலை வேளைகளில் காளைகளுக்கு சுமார் 5 கி.மீ. தூரம் நடைபயிற்சி, 3 நாட்களுக்கு ஒருமுறை நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தன்னை பிடிக்க வருபவர்களை தூக்கி வீசுவதற்காக மண்ணை குத்தி கிளறும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு பிறகு காளைகளுக்கு தவிடு, பருத்தி கொட்டை, சோளம், அரிசிமாவு, பேரீச்சம்பழம் போன்ற சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன.
பயிற்சி அளிப்பது குறித்து ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள் கூறுகையில், ‘காங்கேயம், தேனி மலைமாடு, மரமாடு, கரம்பைமாடு உட்பட 10 வகையான ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் வளர்க் கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு காளைகள் அய்யம்பாளையம் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் போட்டிகளில் பங்கேற்க அழைத்து செல்லப்படுகிறது. இந்தவகையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வண்ணம் பயிற்சி அளித்து வருகிறோம். யாருக் கும் அடங்காமல் போட்டியில் கலக்கும் மாடுகளுக்கு கிராமத்திலும், சமுதாயத்திலும் தனி மரியாதை உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story