தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் கலெக்டர் பிரபாகர் அறிவுரை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் ஒருமுறை உபயோகப்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டுள்ளது.
எனவே, தங்களிடம் உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வைக்காமல், அந்தந்த ஊராட்சி அமைப்புகளில் ஒப்படைக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் தூக்கி எறியாமல் உள்ளாட்சி அமைப்புகள் அல்லது பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்ய முடியும்.
மேலும் இது குறித்து தெரிந்து கொள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு சென்றோ அல்லது www.pl-ast-i-c-p-o-l-lut-i-o-n-f-r-e-etn.org என்ற இணையதள முகவரியிலோ தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story